உத்தரபிரதேச மாநிலத்தில் நூலகத்திற்கு சென்ற மாணவியிடம் அத்துமீற முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
லக்கிம்பூர் கெரி பகுதியில் மாணவி ஒருவர் நூலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த இளைஞர் ஒருவர் அவரது கையை பிடித்து இழுக்க முயன்றார்.
பின்னர் அந்த இளைஞரிடம் இருந்து தப்பித்து மாணவி நூலகத்திற்குள் நுழைந்தார். அங்கிருந்த நூலகர், அந்த இளைஞரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
இந்தச் சம்பவத்தின் வீடியோ வெளியான நிலையில், மாணவியிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















