மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஏற்பட்ட நன்மைகள் பற்றிச் சென்னையில் உள்ள வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டறிந்தார்.
சென்னை பாண்டி பஜாரில் உள்ள பிரபல “அடையாறு ஆனந்த பவன்” உணவகத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்றார்.
அப்போது மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஏற்பட்டுள்ள நன்மைகள் பற்றி நிறுவன அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
அப்போது வரி குறைப்பால் உணவு விலை குறைந்துள்ளதாகவும் இதனால் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதேபோல் பார்க் அவென்யூ, பாலாஜி பவன், நாயுடு ஹால் உள்ளிட்ட கடைகளுக்குச் சென்று உரிமையாளர்களிடமும், வாடிக்கையாளர்களிடமும் ஜிஎஸ்டி வரி குறைப்பின் நன்மைகள் பற்றி நயினார் நாகேந்திரன் எடுத்துரைத்தார்.