மருத்துவக் கல்வியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் கீழ், மத்திய-மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் முதுநிலை நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி ஐந்தாயிரம் முதுநிலை மருத்துவ இடங்களும், ஐந்தாயிரத்து 23 இளங்கலை மருத்துவ இடங்களும் அதிகரிக்கப்பட உள்ளன.
ஒரு மருத்துவ இடத்திற்கு தலா ஒன்றரை கோடி ரூபாய் வீதம் 15 ஆயிரம் கோடி ரூபாய் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அரசு மருத்துவ நிறுவனங்களில் புதிய சிறப்புப் பிரிவுகளை அறிமுகப்படுத்தவும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.