லண்டன் மேயர் சாதிக் கான் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்திற்கு பிரிட்டன் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐநா சபையில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், லண்டன் நகரின் முதல் இஸ்லாமிய மேயரான சாதிக் கானை கடுமையாக விமர்சித்தார்.
லண்டன் முழுமையாக மாறிவிட்டதாகவும், மிகவும் மோசமான மேயராகச் சாதிக் கான் இருப்பதாகவும், மிகவும் மோசமாகப் பணி செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் லண்டனில் குற்றம் உச்சத்தில் இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஷரியா சட்டம்பற்றி இதுவரை சாதிக் கான் எங்குமே குறிப்பிடாத நிலையில், டிரம்பின் கருத்துக்குப் பிரிட்டன் கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளது.
அதேபோல் லண்டன் மேயர் அலுவலகமும் டிரம்பின் கருத்து தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. டிரம்பின் வெறுப்பான மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துகளுக்குப் பதிலளித்து, அவற்றுக்கு மதிப்பளிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது.
லண்டன் உலகின் சிறப்பான நகரங்களில் ஒன்று என்றும், பல அமெரிக்க நகரங்களை விடவும் பாதுகாப்பான நகரமாக உள்ளது என்றும் லண்டன் மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.