தென்கொரியா சென்றிருந்த மத்திய அமைச்சர் எல்.முருகன், Krafton நிறுவன தலைமைச் செயல் அதிகாரி Changhan Kim-ஐ சந்தித்து பேசினார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எல்.முருகன், விளையாட்டு, அனிமேஷன், மின்னணு விளையாட்டு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்கும் இந்தியாவில் முதலீடு செய்யுமாறும் Krafton நிறுவனத்திற்கு தாம் அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.