சேலம் மாவட்டம் ஓமலூரில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஓமலூர் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தைத் தாறுமாறாக இயக்கியபடி வந்தனர்.
இதனைக் கண்ட போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர்.
பேருந்து நிலையப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வந்ததாகவும் ஒயின் ஷாப் என்று இருந்தால் குடித்துவிட்டுதான் வருவோம் எனவும் அவர்கள் வீரவசனம் பேசியது காண்போரை முகம் சுளிக்க வைத்தது.
பேருந்து நிலைய பகுதியில் மதுஅருந்திய இளைஞர்கள் அடிக்கடி இப்படி தகராறில் ஈடுபடுவது மக்களை அச்சமடைய செய்துள்ளது.