அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர்கள் தலா 300 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்துள்ளதாக அவருடன் நெருங்கிப் பழகியவர் காட்டி கொடுத்த சம்பவம் திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான அனிதா ராதாகிருஷ்ணனிடம் உமரிசங்கர் என்பவர் வலதுகரமாகச் செயல்பட்டு வந்துள்ளார்.
அமைச்சரின் நேர்முக உதவியாளர்கள் முதல் அவரது ஆதரவாளர்கள் வரை உமரிசங்கர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கிடையே கடும் போட்டியும் நிலவி வந்துள்ளது.
ஆறுமுகநேரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன், அமைச்சரின் உதவியாளர்கள் தலா 300 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்துள்ளதாகவும், உதவியாளர்களே இவ்வளவு பணம் வைத்திருந்ததால் அமைச்சர் எவ்வளவு பணம் வைத்திருப்பார் எனவும் பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஊழல் குறித்து நாம் தமிழர் கட்சியினரிடம் தகவல் தெரிவித்த உமரி சங்கரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நீக்கியுள்ளார்.