தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகச் சேலம் நெத்திமேடு சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர்.
சேலம் மாநகராட்சி 49வது வார்டு நெத்திமேடு பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாகக் காணப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
மழைக் காலங்களில் தண்ணீருடன் கழிவுநீர் கலந்து நின்றதால் மாணவர்களும், வியாபாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இது தொடர்பாகத் தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றது.
இந்நிலையில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக நெத்திமேடு பகுதியில் சேதமடைந்து காணப்பட்ட சாலையைச் சீர்செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.
சாலைகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்குப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர்.