மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி இல்லத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்ற நவராத்திரி விழா கொண்டாட்டம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாட்டின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா இல்லத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது.
மிகப் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட பெரிய அரங்கில் வெகுவிமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில், முகேஷ் அம்பானியுடன் இணைந்து நீதா அம்பானி, துர்கா தேவியை வணங்கி ஆராதனையில் ஈடுபட்டார்.
மகன் ஆனந்த் அம்பானி, மருமகள் ராதிகா மெர்செண்ட் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும், உற்ற நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட மேடையில் பாரம்பரிய கர்பா மற்றும் தாண்டியா நடனங்களை ஆடியபடி அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
குடும்ப ஒற்றுமையையும், பாரம்பரியத்தை மதிக்கும் பண்பையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.