திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதெல்லாம், காங்கிரஸ் கட்சியின் உரிமை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் அவர், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என தெரிவித்தார்.
அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்பதெல்லாம் எங்களுடைய உரிமை மற்றும் ஆசை என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் நிர்வாகியை திமுகவில் சேர்த்தது அநாகரிகமானது என்றும், காங்கிரஸ் நிர்வாகியை திமுகவில் சேர்த்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.