தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பாஜக பொறுப்பாளராக ஸ்ரீ பைஜயந்த் பாண்டா எம்.பியை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெபி.நட்டா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தேசிய துணைத் தலைவரும் எம்பியுமான ஸ்ரீ பைஜயந்த் பாண்டா தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளளார்.
இதேபோல், தேர்தல் இணைப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் ஸ்ரீ முரளிதர் மொஹோல்
நியமிக்கப்படுவதாகவும், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.