மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் மனு அளிக்க வந்த பயனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முகாம்கள் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் வாலாந்தூரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமிற்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.