புதுச்சேரியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
செல்லிப்பட்டு பகுதியை சேர்ந்த கவிஷ் என்ற மாணவர் வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டு இருந்தார். கூடப்பாக்கம் பகுதிக்கு வந்தபோது எதிரே வந்த லாரி ஒன்று கவிஷ் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாணவர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியான நிலையில், விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் லாரியை சிறை பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டுநர் தப்பியோடிய நிலையில, லாரியை அப்பகுதி மக்கள் சேதப்படுத்தியதோடு அனுமதியின்றி வரும் லாரிகளால் விபத்து நடப்பது தொடர்கதையாகி வருவதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.