அண்மையில் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் பேக்கரியில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
விலை குறைவாக இருப்பதால் வாடிக்கையாளர்களும் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு கடந்த 22-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 5 மற்றும் 18 என இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு பின் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் தொடங்கி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விலை கணிசமாகக் குறைந்திருக்கிறது.
ஜி எஸ் டி வரிக்குறைப்பால் பேக்கரியில் விற்பனை செய்யப்படும் பக்கோடா வகைகள், கிரீம் பண், ஜாம் பண், மிக்சர் வகைகள், முறுக்கு வகைகள் என அனைத்து உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சமாக 2 ரூபாயில் இருந்து 45 ரூபாய் வரை இனிப்புகளின் வகைகளின் விலை குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் தண்ணீர் பாட்டிலின் விலையும் 20 ரூபாயிலிருந்து 18 ரூபாயாகக் குறைந்திருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் திண்பண்டங்களின் விலை கணிசமாகக் குறைந்திருப்பதால் மேலும் அதிகளவிலான உணவுப் பொருட்களை செல்கின்றனர்.
அதே நேரத்தில் விலை குறைந்திருப்பதால் முன்பை விட அதிகளவிலான விற்பனையும் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் அமலுக்கு வந்திருக்கும் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக, பேக்கரியில் விலை குறைவாக விற்கப்படும் இனிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல விற்பனையாளர்களுக்கும் நல்ல பயனை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
















