ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-4 சுற்றில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து சூப்பர் ஓவர் முறை (6 பந்துகள்) கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் இலங்கை அணி இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.