விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்காக கொண்டு செல்லப்பட்டன.
திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நடப்பாண்டும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் கண்டு தரிசித்தனர். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை உள்ளிட்டவை வரும் 28-ம் தேதியன்று திருப்பதியில் நடைபெறும் கருட சேவையில் பெருமாளுக்கு சாற்றப்படவுள்ளது.