கள்ளிக்குடி அடுத்த திருமால் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் கிராவல் மண் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. இதனால் விவசாயம் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படும் எனக்கூறி திருமால், புதுப்பட்டி, சோழபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குவாரிகள் அமைக்க கூடாது என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் மக்களை அழிக்கும் நோக்கத்தில் குவாரிக்கு அனுமதி கொடுத்துள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அத்துடன் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.