பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி, சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் பொதுமக்களுக்கு இலவச தலைக்கவசத்தை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணியாமல் இருப்பதால் விபத்துக்கு உள்ளாகுபவர்கள் மோசமாகப் படுகாயம் அடைவதும், சில நேரங்களில் உயிரிழக்க நேரிடுவதையும் மக்களுக்கு எடுத்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.
அதேசமயம், தலைக்கவசம் விபத்து நேரங்களில் உயிரைக் காக்கும் விதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம் என்றும் அவர் கூறியுள்ளார்.