கரூரில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கரூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது விஜயைக் காண தொண்டர்களின் கூட்டம் கட்டுக் கடங்காமல் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் மயங்கி விழ தொடங்கினர்..
இதையடுத்து மயங்கி விழுந்தவர்கள் உடனடியாக கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள், 17 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் என 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே அரசு மருத்துவமனையில் பிணவறைக்கு வெளியே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.