கரூரில் விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மருத்துவமனைக்கு சென்று உதவிகளை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் த.வெ.க. பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தவர்களுக்கு தமிழக அரசு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் கரூருக்கு நாளை செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.