கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் - விஜய் அறிவிப்பு!
Aug 7, 2026, 02:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் – விஜய் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 28, 2025, 11:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல்.

நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன.

பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது. என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான்.

இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன்.

இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.

அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம் என தெரிவித்துள்ளார்.

Tags: karur vijay meetingvijay campaign speechvijay karurtvk campaign karurvijay rally stampede karurtvk karur campaign deathvijay karur rally stampedevijay namakkal campaignvijay karur rallyvijay karur livestampede at tmk vijay’s karur rallyvijay karur campaign livetvk vijay campaignvijay campaignnamakkal vijay campaignvijay karur campaignvijay campaign livetvk vijay karur campaigntvk vijay campaign in namakkaltvk vijay campaign 2025 namakkal karurvijay campaign rally
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல்!

Next Post

கரூர் தவெக கூட்டத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Related News

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies