தவெக கூட்டம் நடைபெறும் போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டம் வருவதை கணித்து காவல்துறை தகுந்த பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அரசு பாதுகாப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் தான் பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர், ஆனால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வில்லை என சாடினார்.
கூட்டத்தை கட்டுப்படுத்துவதும், ஒழுங்குப்படுத்துவதும் காவல்துறையின் பணி என்றும், “இதுவரை நடந்த அரசியல் கட்சி கூட்டங்களில் இதுபோன்ற ஒரு துயர சம்பவம் நிகழ்ந்ததில்லை என்றும் அவர் கூறினார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு அரசே முழு காரணம் என்பதால் முதல்வர் அங்கு செல்லவில்லை என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.