கரூரில் தவெக கூட்டநெரிசலில் உயிரிழந்த தனது கணவரின் உடலை பார்த்து நிறைமாத கர்ப்பிணி பெண் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்த இளைஞர் தாமரைக்கண்ணன், கரூரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் கூலி வேலை பார்த்து வந்தார். கரூரில் விஜயை பார்ப்பதற்காக சென்ற தாமரைக்கண்ணன், கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் ஒத்தப்பட்டியில் உள்ள மயானத்திற்கு எடுத்து வரப்பட்டபோது, அவரது 9 மாத கர்ப்பிணி மனைவி கதறி அழுதார். இது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.