கரூரில் தவெக தலைவர் விஜயை பார்க்க சென்ற சேலத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தால், அவரது கிராமமே சோகத்தில் மூழ்கியது.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினரான சேலம் மாவட்டம், சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர் ஆனந்த். கரூரில் நேற்று நடந்த பிரசாரத்தில் கலந்து கொண்டார். ஆனால் எதிர்பாராத விதமாக இவரும் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு வரப்பட்ட நிலையில் ஆனந்தின் மனைவி, குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அனைவரும் பெரும் சோகத்தில் மூழ்கினர். மேலும், ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு திமுகவினரும், தவெகவினரும் குவிந்துள்ளனர். பாதுகாப்பு கருதி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.