கரூரில் விஜய் பரப்புரைக்கு காவல்துறை சரியான இடத்தை வழங்கியிருக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதற்கு முன் விஜயின் பரப்புரையில் எவ்வளவு கூட்டம் வந்தது என்பது காவல்துறைக்கு தெரியும் என்று தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். கரூர் அசம்பாவிதம் குறித்து விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அன்புமணி கூறினார்.