கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் , காவல்துறை கண்காணிப்பாளர் முறையாக இடத்தை தேர்வு செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.
கூட்டம் வரும் என தெரிந்து சரியான முறையில் காவலர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்தி இருக்க வேண்டும் என்றும், 500 பேர் பாதுகாப்பில் இருந்ததாக பொறுப்பு டிஜிபிசொல்கிறார் ஆனால் களத்தில் பாதுகாப்பில் இருந்தவர்க்ள் எத்தனை பேர்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்,
மாவ்ட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும அவர் வலியுறுத்தினார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தபடி முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் கூட்டத்தை கட்டுப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை என்றும் அவர் சாடினார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிபி ஐ விசாரணை வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
விஜய் மீதும் குற்றச்சாட்டு உள்ளது என தெரிவித்த அண்ணாமலை, வார இறுதியில் கூட்டம் வைத்தால் நடிகரை காண கூட்டம் கூடும் என்றும், எனவே வார இறுதி கான்செப்டடை விஜய் மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
காவல்துறை எதற்கு அதிக நேரம் அனுமதி கொடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய அனுமதி கடிதத்தில் 3 மணி முதல் 10 மணி வரை என நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.