ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர்…. விளைவு ஒன்றுதான் – இந்தியா வெற்றி பெற்றது… நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.