கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் ஏதேனும் சதித்திட்டம் இருக்கிறதோ? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுவதாக கூறப்பட்டுள்ளது.
மாநில காவல்துறை விசாரித்தால் நியாயமான விசாரணை நடைபெறாது என்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிடப்பட்ட நிலையில் பொது நல வழக்கு என்பதால் தலைமை நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.