இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்னர்.
இதுதொடர்பாக எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், துணிச்சல் மிகுந்த பேச்சின் மூலமும், ஆழ்ந்த சித்தாந்த தெளிவுடனும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்துக் கொண்டிருக்கும் தாங்கள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்வதாக கூறியுள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், தனது நேரடியான, உறுதியான அணுகுமுறையால், பாஜக
சகோதர சகோதரிகளின் பேரன்பைப் பெற்றவரும், துணிச்சல் மிகுந்த தலைவருமான அன்பு அண்ணன் ஹெச்.ராஜா அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
அவர், நல்ல உடல்நடத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து இளைய சமுதாயத்தை வழிநடத்த வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.