நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் AI தொழில்நுட்பம் மூலம் உயிரிழந்த மாணவரை திரையில் கொண்டுவந்து பேசிய காட்சி ஒளிபரப்பப்பட்டது.
பள்ளிபாளையம் அரசு பள்ளியில் கடந்த 2014ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான முன்னாள் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது சிறுவயது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது சமீபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவரை நினைவூட்டும் வகையில் AI தொழில்நுட்பம் மூலம் அவர் பேசிய காட்சி ஒளிபரப்பப்பட்டது. பின்னர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை பள்ளி நிர்வாகத்திற்கு மாணவர்கள் வழங்கினர்.