100 ஆண்டுகளாக தேச சேவையில் அயராது ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
அதன்படி நேற்று உரையாற்றியபோது, விஜயதசமி மற்றொரு காரணத்திற்காகவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும், இந்த நாள் ஆர்.எஸ்.எஸ் தனது 100வது ஆண்டைக் கொண்டாடவுள்ளதாகவும் கூறினார்.
தியாகம், சேவை உணர்வு, ஒழுக்கத்தின் போதனைகள் ஆகியவை ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மையான பலம் என்றும், ஆர்.எஸ்.எஸ் நூறு ஆண்டுகளாக அயராது மற்றும் தடையின்றி தேசத்திற்கு சேவை செய்வதில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனால்தான் நாட்டில் எங்காவது இயற்கை பேரழிவு ஏற்பட்டால் ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் முதலில்அங்குச் செல்கிறார்கள் என்று கூறிய அவர், தேசத்திற்கு சேவை செய்யும் மாபெரும் யாகத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.