கரூர் துயர சம்பவம் : சிபிஐ விசாரணை கோரி தவெக மனு தாக்கல்!
Sep 29, 2025, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் துயர சம்பவம் : சிபிஐ விசாரணை கோரி தவெக மனு தாக்கல்!

Web Desk by Web Desk
Sep 29, 2025, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 3ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த 27ஆம் தேதி கரூரில் நடந்த தவெக பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும், உள்ளுர் அரசியல்வாதியின் அறிவுறுத்தல்படி காவல்துறையினரும், உள்ளூர் ரவுடிகளும் இணைந்து செயல்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரசாரத்தின்போது விஜய் மற்றும் பொதுமக்கள் மீது செருப்புகள் மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளார். கரூர் மாவட்டத்தில் நடக்கும் ஊழல்களைப் பற்றி பேசியதால்தான், கலவரத்தைத் நடத்தியதாகவும்,

நோயாளிகள் இல்லாமல் காலியாகச் சென்ற ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை எனக்கூறி அப்பாவி மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற தன்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை என்றும், 30 பேரின் உடல்களை அவசர அவசரமாகப் பிரேத பரிசோதனை நடத்தி செய்த தவறை மறைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கரூர் சம்பவம் அனைத்தையும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறையின் விசாரணை நியாயமான முறையில் இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை கரூர் மாவட்டத்திற்கு சென்று சந்திப்பதை தடுக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆதவ் அர்ஜூனா மனுவில் குறிப்பிட்டுள்ளார் இந்த மனு நீதிபதி தண்டபாணி, ஜோதி ராமன் அமர்வில் வரும் 3ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags: tvk vijaytvkKarur tragedy: Petition filed seeking CBI investigation!கரூர் துயர சம்பவம்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் அதிக நபர்களால் பார்வையிடப்பட்ட சுற்றுலா தலமாகத் தாஜ் மஹால் உள்ளது – மத்திய அரசு

Next Post

உலக இருதய தினம் – ஈரோட்டில் “வாக்கத்தான்” போட்டி!

Related News

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற தம்பதி – தடுத்து நிறுத்திய போலீசார்!

நாமக்கல்லில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

உலக இருதய தினம் – ஈரோட்டில் “வாக்கத்தான்” போட்டி!

கிருஷ்ணகிரி : மாணவர்களை இறக்கிவிட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளான கல்லூரி பேருந்து!

நெல்லையில் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி – இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ரஷ்ய எண்ணெய் வாங்கும் நேட்டோ நாடு : இந்தியாவை மட்டும் குறிவைக்கும் டிரம்ப்!

மத்தியப் பிரதேசம் : கோயில் திருவிழாவில் சாய்ந்து விழுந்த ராட்டினத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு!

சீனாவில் திறக்கப்பட்ட உலகிலேயே மிக உயரமான பாலம்!

அமெரிக்கா : தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு!

கரூர் துயர சம்பவம் : சிபிஐ விசாரணை கோரி தவெக மனு தாக்கல்!

இந்தியாவில் அதிக நபர்களால் பார்வையிடப்பட்ட சுற்றுலா தலமாகத் தாஜ் மஹால் உள்ளது – மத்திய அரசு

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது – ஜெய்சங்கர்

கனமழையால் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies