கரூர் தவெக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம்குறித்து ஆய்வு செய்யத் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழுவை அமைத்துப் பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
இத்துயரச் சம்பவம் குறித்து அறிக்கை தயாரித்து தாக்கல் செய்ய 8 பேர் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான குழுவில் எம்பிக்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால் மற்றும் சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
எம்.பி அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி புட்டா மகேஷ் குமார் ஆகியோரும் குழுவில் உள்ளனர்.
கரூர் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அறிக்கை வழங்கவும் எம்பிக்கள் குழுவுக்குப் பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.