பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் அரியணை ஏறுகிறார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்த ரோஜர் பின்னி 70 வயதான நிலையில் பதவி விலகினார். அதை தொடர்ந்து துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பிசிசிஐயின் தற்காலிக தலைவராகப் பொறுப்பேற்றார்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், பிசிசிஐயின் புதிய தலைவராக சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் மிதுன் மனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் 37-வது தலைவராக அரியணை ஏறுகிறார். அதே சமயம் பிசிசிஐ துணை தலைவராக ராஜீவ் சுக்லா, செயலாளராகத் தேவஜித் சைக்யா ஆகியோர் நீடிக்கின்றனர்.