ஆப்ரேசன் சிந்தூரில் பாகிஸ்தானின் ஏவுகணைகள், விமானங்களை இடைமறித்துத் தாக்கிய எஸ்-400 வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்கி குவிப்பதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. அதுமட்டுமல்ல, நவீன எஸ்-500 வான் பாதுகாப்பு தளவாடங்கள்மீதும் கவனத்தை திருப்பியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
ஆப்ரேஷன் சிந்தூரில் இந்திய வான் எல்லையைக் காட்டிக்காத்த ஹீரோவாக எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டது. RUSSIAN MADE TECHNOLOGY – ஆன எஸ் 400 வான் பாதுகாப்பு தளவாடம், பாகிஸ்தானின் போர் விமானங்களை 300 கிலோமீட்டர் தொலைவிலேயே தாக்கி அழித்துச் சிம்ம சொப்பமனமாக விளங்கியது.
எதிரி நாட்டு இலக்கை மிக நீண்ட தூரத்திலேயே தாக்கி அழித்த பெருமையையும் பெற்றது. போரின்போது பாகிஸ்தானை கலங்கடித்த எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதில் தான் இந்தியா தற்போது ஆர்வம் காட்டி வருகிறது. எதிரி நாட்டு ஏவுகணைகள் 400 கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஏவப்பட்டாலும், அதனை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் படைத்துள்ளது எஸ் – 400 வான் பாதுகாப்பு அமைப்பு.
போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரான்கள் என எதுவும் இதன் பிடியில் இருந்து தப்பமுடியாது. எஸ்-300 தளவாடத்தை காட்டிலும், இரண்டரை மடங்கு அதிக வேகத்தில் இயங்கக்கூடியதாக எஸ் 400 வான்பாதுகாப்பு அமைப்பு உள்ளது கூடுதல் சிறப்பம்சம். நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய எஸ் 400-ல், நவீன ரேடார் பொருத்தப்பட்டுள்ளது.
400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்குவதற்கு மட்டுமல்ல, 250, 120, 40 கிலோ மீட்டர்எனக் குறைந்தத இலக்கிற்கு ஏற்றவாறும் ஏவுகணைகளை பொருத்தும் வகையில் எஸ்-400 தயாரிக்கப்பட்டுள்ளது. எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பால் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட எதிரி நாட்டுவிமானங்களைக் கண்காணிக்கக முடியும்.
அதில் 12 விமானங்களை ஒரே நேரத்தில் சுட்டு வீழ்த்தவும் முடியும். இந்தியாவுக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் நிலையில், அதனை எதிர்கொள்ள எஸ்-400 கைகொடுக்கும் என நம்பப்படுகிறது. அதன் காரணமாக ரஷ்யா தயாரிப்பில் உருவான வான் பாதுகாப்பு தளவாடத்தை வாங்க மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி, மொத்தம் ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதில் மூன்று தளவாடங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு தளவாடங்கள், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்-400 மட்டுமல்ல, எஸ்-500 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதிலும் இந்திய பாதுகாப்புத்துறை ஆர்வம் காட்டுகிறது.
ஆனால், தங்களின் தேவையை நிறைவேற்றிய பின்னரே, பிற நாடுகளுக்கு வழங்கப்படும் என ரஷ்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் கடுமையாக விலை உயர்ந்த போதும், ஆப்ரேஷன் சிந்தூரில் எல்லையைக் கட்டி காத்த எஸ்-400 வான் பாதுகாப்பு தளவாடத்தை எந்த விலை கொடுத்து வாங்கவும் இந்தியா தயாராகவே இருக்கும் எனப் பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.