அல்லு அர்ஜுனை கைது செய்தது போல் விஜய்யையும் கைது செய்ய வேண்டுமென உங்களில் ஒருவன் அமைப்பின் தலைவர் அறிவழகன் வலியுறுத்தியுள்ளார்.
கரூர் தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விஜய்யை கைது செய்ய வேண்டுமெனச் சென்னை டிஜிபி அலுவலகத்தில் அறிவழகன் புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது பெண் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுனை கைது செய்தது போல் தவெக தலைவர் விஜய்யையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.