மும்பையில் இருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் சென்ற பச்சிம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் இரண்டு முறை தனியாகக் கழன்று சென்றதால் பயணிகள் பீதியடைந்தனர்.
மும்பையின் பாந்திரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பச்சிம் எக்ஸ்பிரஸ், போரிவிலியை கடந்து சென்றபோது திடீரென ரயிலின் கடைசி 2 பெட்டிகளின் இணைப்பு உடைந்தது. உடனடியாக ரயிலானது நிறுத்தப்பட்டு, பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டு ரயில் புறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரயில் சஞ்சன் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, அதே 2 பெட்டிகள் மீண்டும் கழன்று சென்றன.
இதன் காரணமாக ரயில் அமிர்தசரஸ் சென்றடைய 3 மணி நேரம் தாமதமானது. மேலும் ஒரே பெட்டிகள் இரண்டு முறை கழன்று சென்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.