கரூர் துயர சம்பவ எதிரொலியாகச் சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் இல்லத்தை சுற்றிலும் 3வது நாளாகப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூரில் கடந்த 27ஆம் நடந்த தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாகச் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தைச் சுற்றிலும் 3வது நாளாகப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விஜய்யின் வீட்டுக்குச் செல்லும் முக்கியச் சாலைகளில் தடுப்பு அமைத்துப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும், வெளியாட்களை அனுமதிக்காமல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கைப் பேணும் வகையிலும், தலைவர் விஜய்யின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.