அரசியல் கட்சிகள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளைச் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட புதிய தமிழகம், தமிழக முன்னேற்றக் காங்கிரஸ் உள்ளிட்ட 10 அரசியல் கட்சிகள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளைச் சமர்ப்பிக்கவில்லை என்றும், அந்தக் கட்சிகளைப் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கத் தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், நடவடிக்கைக்கு முன்பாக 10 கட்சிகளும் தங்கள் கருத்தினை தெரிவிக்க நேரடி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.