தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த முள்ளுவாடியில் இடிக்கப்பட்ட கோயிலை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
முள்ளுவாடி கிராம மக்களுக்குக் குலதெய்வமாக இருந்த மாரியம்மன் கோயில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்ததாகக் கூறி அண்மையில் அகற்றப்பட்டது.
இந்தநிலையில் பொய்யான ஆவணங்களைத் தயாரித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கோயில் இடிக்கப்பட்டதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.