உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை ஒட்டி மலர் கண்காட்சியை காண நாள்தோறும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
கர்நாடகத்தின் நாடஹப்பா என்றழைக்கப்படும் மைசூரு தசரா விழா மன்னர் காலத்தில் இருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க 415-ம் ஆண்டு தசரா விழா திங்கட்கிழமை தொடங்கியது.
இத்திருவிழா வரும் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், தசரா விழாவுக்குக் கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக மலர் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.
பல்வேறு வண்ண வண்ண மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட யானை மற்றும் பல்வேறு வகையான மலர்களை காண்பதற்காக மக்கள் குவிந்தனர்.
















