மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள ‘சாயவனேஸ்வரர்’ கோயிலில் உள்ள பழமையான தமிழ் கல்வெட்டுகளைத் தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழக அரசின் உத்தரவுப்படி பூம்புகார் கடற்கரை பகுதிகளில் தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி சாயாவனம் பகுதியில் உள்ள 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘சாயவனேஸ்வரர்’ கோயிலில் உள்ள பழமையான தமிழ் கல்வெட்டுகளைப் படியெடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆய்வுக்குப் பிறகு பூம்புகார் குறித்த பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.