பாரம்பரிய கர்பா நடனமாடிய பெண்களின் காணொளி சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கர்பா நடனம் குஜராத்தில் தோன்றிய நாட்டுப்புற நடன வகைகளில் ஒன்றாகும். இந்த நடனம் பெரும்பாலும் நவராத்திரியின்போது, பெண்ணின் தெய்வீக வடிவத்தைப் போற்றும் விதமாகவும், ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வகையிலும் அரங்கேற்றப்படுகிறது.
இது உலகம் முழுவதும் உள்ள குஜராத்தி மக்களால் ஆடப்படும் ஒரு மகிழ்ச்சியான நடனமாக விளங்குகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரியையொட்டி, குஜராத் மாநிலத்தில் பெண்கள் ஒன்றிணைந்து எந்தவித இசைக்கருவிகளோ, மைக்கோ இல்லாமல் பாடல் பாடி கர்பா நடனத்தை அரங்கேற்றினர்.
















