பாகிஸ்தானிடம் இருந்து கோப்பையை வாங்க விரும்பவில்லை என இந்தியா தெரிவித்த பிறகு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி விலகியிருக்க வேண்டும் என இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா, ஆசிய கோப்பை தங்களிடம் வழங்க மறுக்கப்பட்டது தொடர்பாக நவம்பரில் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் முறையிடப் போவதாகவும், விரைவில் ஆசிய கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மோசின் நக்வி பரிசளிப்பு விழாவில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
















