திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தலில் ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இபிஎஸ், சகோதரியின் கண்முன்னே இளம்பெண் போலீசாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவலநிலையின் கொடூர உச்சம் என விமர்சித்துள்ள அவர், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களால் பெண்ணுக்கு கொடுமை நேர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த வெட்கக்கேடான நிலைக்கு முதலமைச்சரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும் என பதிவிட்டுள்ள இபிஎஸ், மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.