ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து, தென் மாவட்டங்களை நோக்கி சென்ற வாகனங்களால் கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழக முழுவதும் ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட விழாக்களுக்காக தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் அதிக அளவில் மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றிரவும் ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் கிளாம்பாக்கம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.