நேபாள அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் சார்ஜாவில் நடைபெறுகிறது. முதல் டி 20 போட்டியில் நேபாளம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியில் நேபாளம் அணி 20 ஓவர்களில் 173 ரன்கள் குவித்தது.
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் மட்டுமேஎடுத்துப் படுதோல்வி அடைந்தது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை நேபாளம் அணி 2 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.