அரசு நிர்வாகத்திற்கான நிதி மசோதாவுக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்காததால் அமெரிக்க அரசாங்கம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் செலவினங்கள் குறித்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில், அடுத்த நிதியாண்டிற்கான அமெரிக்க அரசின் செலவினங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காததால் அமெரிக்க அரசாங்கம் பகுதியளவு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க செனட்டில், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் போட்டியாளர்களின் இடைநிறுத்த திட்டங்களை நிராகரித்ததை அடுத்து அமெரிக்க அரசாங்கத்தை தொடர்ந்து இயக்குவதற்கான நிதி நள்ளிரவு முதல் காலாவதியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அமெரிக்காவில் அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்களுக்கு ஊதியம் கிடைக்காத நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தற்காலிக விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும், இதனால், கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.