சென்னை அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருத்தப்பட்ட கட்டணங்களின்படி சென்னை நெடுஞ்சாலையில் 19 கிலோ மீட்டர் முதல் 32 கிலோ மீட்டர் வரையிலான தொலைதூரத்திற்கு கட்டணம் திருத்தப்பட்டது.
அதன்படி சென்னை அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பதிவெண் கொண்ட வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு 40 ரூபாயிலிருந்து 35 ரூபாயாகக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்களுக்கான கட்டண தொகை எவ்வித மாற்றமும் இன்றி 75 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.