நடிகர் மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது. உடல்நிலைக் காரணமாக மம்மூட்டி 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார்.
இதனால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.
புதிய படத்தின் தலைப்பு MMMN என்று தெரிவித்துள்ள படக்குழு, டீசர் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.